உன் தத்துவங்கள் 0028

உன் மஞ்சள்
என் தேகத்தில் தெரியுதடி
உன் முத்தங்களினால்
என் தேகம் நனையுதடி
சில கனவுக்குள்
என்னென்னவோ நிகழுதடி
காலையில்
கேள்வி கேட்குதடி
என் நெஞ்சுக்குள்
ஆசைகள் வெடிக்குதடி
பஞ்சுகளாய்
அங்குமிங்கும் பறக்குதடி
என் பிஞ்சு நெஞ்சம்
உன்னை கேட்டு பதறுதடி
இன் பிரிவுகள்
நிரந்தரமற்றவை என்று
உன் தத்துவங்கள்
மிதமாய் கொல்லுதடி..

அகமல்தாஸ்

எழுதியவர் : அகமல்தாஸ் (30-Aug-14, 5:36 pm)
Tanglish : un thatthuvankal
பார்வை : 191

மேலே