சில நேரங்களில்
கைப்பிடித்து கூட்டிகொண்டுபோய்
எங்கோ நடுவீதியில்
தவிக்கவிட்டுவிட்டுபோன
குழந்தையொன்று
திக்கு திசைத்தெரியாமல்
முழித்தவண்ணம்
அங்கும் இங்கும் பார்ப்பதைப்போல்
எந்தன் சில நேரங்களில்
புத்தி பேதலிக்கச்செய்கிறேன்
சில நொடிகளுக்குப்பின்னால்
மீண்டும் இயல்பிற்கு வந்துவிடுகிறேன்
நானே எனக்கொரு நேரம்போக்குக்காரனாக ,,
அனுசரன்