வேள்வித்தீ
எச்சம் உண்டு வாழ்வதா..?
ஏங்கி ஏங்கி பிழைப்பதா..?
உண்மை உறக்கம் கொள்வதா..?
உழைக்க அஞ்சி கிடப்பதா..?
வீறுகொள் இளைஞனே..!!
விருப்பம்போல் வாழ்ந்திட..!!
கவலை சுமக்க தேவையில்லை..
கனவு உண்டு,
உன்னிடம்.
காதல் புரிய தேவையில்லை..
கடமை உண்டு,
உன்னிடம்.
போதை ஏற்க தேவையில்லை..
பொறுமை உண்டு,
உன்னிடம்.
பாதை மாற தேவையில்லை..
பற்று உண்டு,
உன்னிடம்.
வீறுகொள் இளைஞனே..!!
விருப்பம்போல் வாழ்ந்திட..!!
காலம் கடந்து போகட்டுமே..!
கன்னிகளும் கடந்து போகட்டுமே..!
ஊர்கூடி நின்று ஏசட்டுமே..!
வாழதெரியாதவனென வசை பாடட்டுமே..!
அணுவளவும் அஞ்சிடாதே..!
ஆளபிறந்தவன் நீ..!
மறந்திடாதே..!
வீறுகொள் இளைஞனே..!!
விருப்பம்போல் வாழ்ந்திட..!!
வாழ்வது ஒருமுறை -அது கோழையின் சிந்தனை..
சாவதும் ஒரே முறை -என்றும், இதை நினை..!
நிஜமாய் உன்னை கேட்கிறேன்..
நினைவில் கொஞ்சம் நிறுத்திடு..!
வீரம் ஒன்று
இல்லையேல்
விதையும் விருச்சமாய்
மாறுமா..?
முயற்சி ஒன்று
இல்லையேல்
முயலை ஆமை
வெல்லுமா..?
உன்
நேர்மை ஒன்று
போதுமே..!!
நெருப்பும் அஞ்சி நிற்குமே..!
காலம் உணர்ந்த வேளையில்
கதவை வெற்றி தட்டுமே..!
இலக்கை அடைந்துவிட்டோமென்று
இன்பமுரசு கொட்டுமே..!!
வீறுகொள் இளைஞனே..!!
விருப்பம்போல் வாழ்ந்திட..!!