நினைவுகள்
நினைவுகள்
ஏனோ
வாட்டுது.....போதும்
விட்டுவிடு
என்று
கதவுகள்
பூட்டுது......!!
அவள் தரும்
அவஸ்தைகள்
தாங்காமல்
இவன் பெறும்
இன்னல்கள்
கோடி கோடியடி......!!
தொலைத்த
வாழ்க்கையில்
இழந்த
மகிழ்ச்சியை....தொலைபேசியில்
மறுபடி
தொலைத்தேன்.....!!
பிள்ளையை
பார்க்கும்
ஆவலில்.....நான்
காவல்
இருந்தேன்.....காலைவேளை
கண்ணீரில்
விடியாமல்
போனது......!!
என் சோகம்
என்னோடு
போகட்டும்....யாரோடும்
பங்குபோடாமல்.....!
கண்ணீரில்
காலம்
கடத்தும்
நிகழ்வுகளை
நான்
பல
கண்டதுண்டு.....இதுவும்
இதோடு
சேரட்டுமே.....!!
தனித்து
வாழும்
இந்த
தூரதேச
வாழ்க்கை.....சிறு
சஞ்சலம்
என்றாலும்
என்னைக்
கொன்றுவிடுகிறது.....!!
மணிக்கணக்கில்
பேசிக்கொள்ள
இந்த
அந்நிய தேசப்
பிழைப்பு
அனுமதிக்காது
எவரையும்.....காரணம்
காசு....தேடி
கரணமடிக்கும்
வேலைகள்
பல........!!
கவலைகளைப்
போக்கும்
கனிவான
பேச்சுக்களைத்
தா......கொஞ்சம்
மனம்
விட்டுச்
சிரிக்க......!!