சுவடு
பாய்ந்தாடும் அலை -காற்றின் சுவடு
கரியாகும் புகை -தீயின் சுவடு
கலைந்த தேகம் -காதலின் சுவடு
அடர்ந்த உறக்கம் -உழைப்பின் சுவடு
தெருவெங்கும் பாதம் -தேடலின் சுவடு
உடலுறும் ரத்தம் -உயிரின் சுவடு
கண்களில் ஊற்று -வலியின் சுவடு
நிறைவுறா மௌனம் -நினைவின் சுவடு
உருபெறும் கனவு -ஆசையின் சுவடு
எண்ணங்களின் மூப்பு -காலத்தின் சுவடு
பசித்த வயிறு -பஞ்சத்தின் சுவடு
எரிகின்ற பிணம் -உண்மையின் சுவடு
இக்கவிதையின் பிறப்பு -நான் வாழ்ந்ததன் சுவடு..!