மதுரை தமிழ் வாசம்

வைகை வறண்டுவிடவில்லை
வார்த்தைகள் காய்ந்துவிடவில்லை
மதுரைத் தமிழ் இது
மருக்கொழுந்து வாசம் இது
மங்கையர் சூடும் கதம்பம் இது
தென் பொதிகை மலை உச்சியிலே
பூத்து வந்த புது மலர் இது
தென் மதுரை வீதியிலே
வலம் வந்த அழகு இது
கணினி வீதிகளை
அழகு செய்ய வந்த
கற்பனை பூ இது
~~~ கல்பனா பாராதி~~~

எழுதியவர் : கல்பனா பாராதி (31-Aug-14, 8:59 am)
பார்வை : 156

மேலே