அர்த்தம் தேடும் அர்த்தமற்ற என் பிடிவாதங்கள்-வித்யா
![](https://eluthu.com/images/loading.gif)
அர்த்தம் தேடும் அர்த்தமற்ற என் பிடிவாதங்கள்-வித்யா
முற்றுப்புள்ளியோடு நீ
நெருங்கி வரினும்
கேள்விக்குறியோடே முடியும்
எனை புரிந்து கொள்ளும்
உனது முயற்சிகள் யாவும்
என்னில் ஆயிரம்
ஆச்சர்ய குறிகளை நிரப்புகின்றன.....!
எந்த நிபந்தனை
கோட்டுக்குள்ளும்
நிதாநிக்காத எனதெண்ணங்கள்
வீண் பிடிவாதமென உயிர்த்தெழுகின்றன...!
இவள் இப்படித்தானோவென
யார் வரையும் வட்டத்தின்
வடிவாயும் இல்லாதிருப்பதில்
எனக்கெந்த வருத்தமும் இருந்ததில்லை.........!
உண்மையில் நான் பிடித்த
முயலுக்கு மூன்று கால்கள்
என்று கூறும் உரிமை எனக்குண்டு........
உலகில் வாழும் எல்லா முயலுக்கும்
மூன்று கால்தான் என்று சொல்ல
நான் யார்......?
சிறு புரிதலில்
நெருங்கி வரும் உறவுகள்
தவறான புரிதலின்போது
வெற்றிடங்களை வெருமனாகவே
விட்டுவிடுகின்றன.....!
உனக்கான
என் புன்னகைகள்
உன்னில் மகிழ்ச்சியை
கொடுத்திருக்கலாம்.......!
பிரிதலில்
உனக்கு நான்
பரிசளிக்காத கண்ணீர்
என் வெற்று பிடிவாதமே.......!
என்றோ நான் தொலைத்த
என் திமிர்......
உன் அன்பெனும்
சேற்றிற்குள்
சிக்கி இருக்கலாம்..........
தூர் வாரி என்னிடமே
திருப்பி கொடுத்துவிடு
நான் திமிர் பிடித்தவளாகவே
இருந்துவிடுகிறேன்.....!
நீ என்னோடில்லா
இந்நாட்களிலெல்லாம்
எல்லோருக்கும் பிடிக்கின்ற
பெண்ணாக இருக்க
எனக்கு விருப்பமில்லை........!
@@@@@@@@@@@@@@வித்யா@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@