கூட்டல் கழித்தல் பெருக்கல்

அன்பை கூட்டி
பகையை கழித்து
ஒற்றுமையை பெருக்க வேண்டும் மாணவர்களே

நினைவாற்றலை கூட்டி
தீயவை கழித்து
ஆக்கத்தை பெருக்கவேண்டும் மாணவர்களே

பொறுமையை கூட்டி
கோபத்தை கழித்து
சமாதானத்தை பெருக்கவேண்டும் மாணவர்களே

தாய்மையை கூட்டி
காமம் கழித்து
சகோதரத்துவத்தை பெருக்கவேண்டும் மாணவர்களே

நாம் என்ற உணர்வை கூட்டி
தான் என்ற அகந்தை கழித்து
சமத்துவத்தை பெருக்கவேண்டும் மாணவர்களே

தேச உணர்வை கூட்டி
வன்முறையை கழித்து
வல்லரசாய் நாட்டை பெருக்கவேண்டும் மாணவர்களே

முயச்சியை கூட்டி
ஆசையை கழித்து
வாழ்க்கையை பெருக்கவேண்டும் மாணவர்களே

உழைப்பை கூட்டி
சோம்பலை கழித்து
வெற்றியை பெருக்கவேண்டும் மாணவர்களே

நேர்மையை கூட்டி
பொய்மையை கழித்து
மனிதத்துவத்தை பெருக்கவேண்டும் மாணவர்களே

எழுதியவர் : sivakumar (31-Aug-14, 6:32 pm)
பார்வை : 77

மேலே