+துளிப்பா சங்கமம்+

+துளிப்பா கொஞ்சம் புளிப்பா!+

அவ மொறப்பா
போவா வெறப்பா
நான் பாக்காத நேரம் என்னை பாப்பா!

இருப்பா செவ‌ப்பா
தானா சிரிப்பா
என்னை மட்டும் ஏனோ வெறுப்பா!

அழகா நடப்பா
சாலையை கடப்பா
என்னைப் பார்த்தாலோ கோவத்தை கொடுப்பா!

தேவதையா இருப்பா
நல்லா நடிப்பா
எவனாவது தீண்ட வெடியா வெடிப்பா!

கண்ணாலே அழைப்பா
கவிதைபல கொடுப்பா
கனவிலே தினமும்வந்து காவியங்கள் படைப்பா!

============================================

+துளிப்பா கொஞ்சம் துவர்ப்பா!+

பூக்களைப் பறிப்பா
சரமெனத் தொடுப்பா
பூவை விடவும் அவள்ரொம்ப மணப்பா!

ஏதோ நெனப்பா
நாக்கை கடிப்பா
அவள் விழியம்புதாக்கி இதயத்தில் வடுப்பா!

மழலையாய் விழிப்பா
துன்பத்தை அழிப்பா
இன்பமாய் மனதில் மழையையே அளிப்பா!

இதயத்தில் குதிப்பா
இன்னிசை படிப்பா
அவள் மீதுவீசும் காதல் நெடிப்பா!

அவளொரு ரதிப்பா
இயற்கையை ரசிப்பா
என்மனம் தொட்டது கடவுளின் விதிப்பா!

=========================================

+துளிப்பா கொஞ்சம் உவர்ப்பா+

பேச்சோ இனிப்பா
பார்வை முனிப்பா
தொல்லை கொடுத்தா ஆவா சனிப்பா!

காதல் மனுப்பா
பலரும் கொடுப்பா
அவரின் இதயம் தினமும் உடைப்பா!

அவளென்ன விடுப்பா
ஆகிடுவேன் கடுப்பா
பார்க்கவே போகணும் என்னையும் விடுப்பா!

அவளொரு பூக்கடைப்பா
அவளுக்கென்ன மூக்கடைப்பா
காதலி இரும இதயத்தில் வலிப்பா!

பாத்துக்குவேன் பொறுப்பா
இருந்திடுவேன் செறுப்பா
இந்த காதலுக்கும் இங்கே மறுப்பா!

=====================================

+துளிப்பா கொஞ்சம் இனிப்பா+

இயல்பிலே கனிப்பா
உருகிடும் பனிப்பா
பேசிடும் போது மறந்திடும் மணிப்பா!

காதலுக்கவள் பொருட்பா
காத்திருந்தா கிடைப்பா
கனவுடன் இருப்பேன் நானும் எதிர்பார்ப்பா!

அவளொரு தமிழ்ப்பா
தென்றலவளுக்கு மூப்பா
மனதிற்குள் மலராய் தினமவளே பூப்பா!

காதலுரைக்கும் நொடிப்பா
தூரமின்னும் குறைப்பா
ஆசையைத்தூண்டி காதலை மேலும் வளர்ப்பா!

வாழ்கையவள் வழிப்பா
காதலையும் ஏற்பா
வாழ்கையையே மாத்திடுவா அவளும் செழிப்பா!

===========================================

+துளிப்பா கொஞ்சம் கார்ப்பா!+

எதுக்கெதுக்கோ கோவிப்பா
வறுத்தெடுத்து தாளிப்பா
கோபக்கணையால் தினமும்ஏனோ என்னைஅர்ச்சிப்பா!

முதலில் என்னைப்பார்ப்பா
என்னைப்பார்க்கும் பொண்ணைப்பார்ப்பா
இல்லாதது இருப்பதுபோல அழகாஅவ ஜோடிப்பா!

அடிக்கடி மோதிப்பா
அழவிட்டு சாதிப்பா
காதலிக்க லாயக்கில்லையென எனக்கவள் போதிப்பா!

ஒரு நாள் மழைப்பா
மறந்தேன் குடைப்பா
எவனோடோ பறந்தா எனக்கோ மூக்குடைப்பா!

இந்த காதல்கதைப்பா
இதில் தினமும்உதைப்பா
எந்தன் கனவை மெல்லமெல்லவே அவள்சிதைப்பா!

===============================================

+துளிப்பா கொஞ்சம் கசப்பா!+

வேணும்னே அடிப்பா
கதைபேசி முடிப்பா
அவ பிரிவெனக்கிருக்குதே ரொம்ப கசப்பா!

மனசாலே பாப்பா
லாலிபாப் கேப்பா
பொலம்பவிட்டு போனாலே என்னை தப்பா!

அவளில்லா நொடிப்பா
நினைச்சாலே விஷம்பா
தேம்பிதேம்பி அழுகுது இந்த உயிர்ப்பா!

அவளென்ன மணப்பா
இருந்தேனவ நினைப்பா
ஏமாற்றி போனஅவ நல்லா இருப்பா!

காதலொரு படிப்பா
ஆனேனிப்ப பொறுப்பா
கொஞ்சம் காதலிருந்தா எனக்காய்கண்ணீர் வடிப்பா!

((எனக்கு பிடித்த எனது துளிப்பாக்களின் தொகுப்பு))

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Sep-14, 9:04 am)
பார்வை : 187

மேலே