கின்னஸ் சாதனை
கின்னஸ் சாதனை
ஏப்பா எப்பப் பாத்தாலும் கின்னஸ் சாதனை படைக்கப்போறேன்னு கின்னஸ் சாதனை படைக்கப்போறேன்னு அடிக்கடி சொல்றயே அப்படி என்ன சாதனையைப் படைக்கப்போற?
மணிக்கணக்கில் பேசி, கைதட்டி, ஒத்தக் கால்லெ மணிக்கணக்ல நின்னு, நெறைய இட்லிகங்கள சாப்பிட்டு, 3000 பேரு கூட்டாச் சேந்து நாட்டின் முன்னேற்றதுக்காக பல மணி நேரம் தொடர்ந்து அதிகப் பரப்பளவில் கோலம் போடறது இதுமாதிரியெல்லாம் பயனுள்ளதைப் பண்ணி தினமும் யாராவது கின்னஸ் ரெக்கார்ட்ல இடம்பிடிச்சிட்டிருக்காங்க.
சரி நீ என்ன சாதிக்கப் போற அதச்சொல்லு
ஒண்ணுக்கும் ஒதவாத கவிதங்கள நெறைய எழுதி புத்தகமா என் சொந்தச் செலவுலெ வெளியிட்டு புத்தகத்தோட ஒரு பிரதியைக் கூட விக்காம சாதனை படைச்சு கின்னஸ்லெ இடம் பிடிக்கப் போறேன். இந்த மாதிரி சாதனையை யாரும் இதுவரைக்கும் படைக்கலன்னு எனக்கு உறுதியாத் தெரியும்.