என்னத்ததான் சொல்லறது போங்க

இது கவிதையும் அல்ல, கதையும் அல்ல, கட்டுரையும் அல்ல. வேதனையின் வெளிப்பாடுங்க.
நம்ம மக்களை பார்த்தாதான் பாவமாவும் இருக்கு, கோவமாவும் வருது.

என்ன சொல்லவரேன்னு தலையும் புரியல வாழும் புரியலையா. சொந்த காசுல சூனியம் வச்சுக்குரவங்களை பார்த்தா சிரிக்கறதா அழுகரதான்னு தெரியலை. காசகுடுத்து குடிச்சு கோடலு வெந்து சாகரவங்களை பின்ன என்ன சொல்றதுங்க.

இதுல சாரயகடைய கவேர்மெண்டே நடத்துற அவலம் வேற எங்கயும் இருக்காதுன்னு நினைக்கிறேன். நாடு மக்கள் நலத்துல அக்கறை காட்டுறேன், அக்கறை காட்டுறேன்னு சொல்லுறாங்களே. நிஜமாவே அக்கறை காட்டுறாங்களா?
ஒரு காலத்துல கள்ளுக்கடை ஒழிப்புக்கு வேண்டி தன் தோட்டத்து தென்னை மரங்களை கூட வெட்டினவங்கள பத்தி படிச்சிருக்கேங்க.

ஆனா இன்னைக்கு நாட்டு வருமானத்துக்காக சாராய கடைய அரசாங்கமே நடத்தற அவலத்த என்ன சொல்ல.?
போதை தலைக்கேறி, பாதை மாறி , மாதை வதை செய்யும் மனிதர்களை என்ன செய்ய?

மனைவி தாலியை அடகு வைத்தாவது குடிக்கும் குடிமகன்களிடமிருந்து பணத்தை ஈட்டி இந்த அரசாங்கம் யாருக்கு நலத்திட்டம் தீட்ட போகிறது?

தாய், தந்தை , மனைவி , பிள்ளைகளை பட்டினி போட்டு, அவர்கள் எதிர்காலத்தை பாழடித்து தன் சுகத்துக்காக குடிக்கும் மகான்களிடமிருந்து பெரும் பணத்தில் இந்த அரசாங்கம் யாருக்கு நல்லது செய்ய போகிறது?

பெரியவர்கள் முன்னால் புகை பிடிக்க கூட, வெட்கப்பட்ட இளைய சமுதாயம், இன்று சாதரணமாய் மது அருந்தி விட்டு , இது பேசன் என்கிறது.
மது விற்பனை முந்தய ஆண்டுகளை விட அதிகமாக விற்று சாதனை படைத்துள்ளது.
மது அருந்துபவர்கள் சதவீதம் இப்போது முந்தய ஆண்டுகளை விட பல படி அதிகரித்துள்ளது.
இந்த தகவல்கள் எதை காட்டுகிறது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்சியையா ?

ஆட்சி மாறினால் இந்த சாபம் மாறுமா என்று காத்திருந்தவர்கள் தான் மனதை தேற்றி கொள்ள வேண்டும் போல் தெரிகிறது.
என் நாட்டை பிடித்த சாபம் என்று மாறும். இதை மாற்ற சட்டம் போடுபவர் யார்?
விடை தெரியா கேள்வி இது. தெரிந்தவர் சொல்லுங்களே!

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (2-Sep-14, 2:57 pm)
பார்வை : 73

மேலே