எண்ணம்

புதைத்து வைத்த எண்ணங்கள் கோடி
வடிவெடுத்த எண்ணங்கள் கோடி
தோற்றம் இல்லா எண்ணங்கள் கோடி
மனச்சுரங்கத்தின் புதையலல்லவா
விபுதன் என்று யாரும் இல்லை
எந்த விளக்கும் இருளை விரட்டும்
ஒளியின் தன்மை யவ்வாறு மாறும்
அதன் வன்மை இருள் தான்அறியும்
எண்ணம் என்னும் வண்ணம்
பண்ணும் விந்தை உன்னும்
எண்ணும் எழுத்தும் ஏடும்
இன்னும் இன்னும் இன்னும்
எண்ணம் என்றும் மின்னும்
வெட்டும் சிந்தனை வெட்டும்
கட்டும் எட்டுத் திக்கும்
தக்கும் தவிக்கும் இன்னும்