அது ஒரு கனா காலம்

நானொரு சுட்டி
கண்டடெடுத்த மண் சட்டி
குழந்தை பருவத்திலே
ஆதவன் அஸ்தமித்தால்
தோன்றும் கும்மிருட்டு !!

அரிக்கன் விளக்கு அரிதான காலமது
அந்தி மதி ஒளியே
அன்னம் ஊட்டும் அன்னையாகும்
ஓடிவிளையாடி ஓய்ந்திடுவோம்
பத்து மணியெல்லாம் நடுநிஷியாகும்

ஆதவன் விழிக்கும் முன்னே
காக்கையும் சேவலும் குரல் கொடுக்கும்
அது கேட்டு ஊர் விழிக்கும்
அவரவர் எறும்பாய் பறப்பார்
அதிகாலை நேரத்திலே ...

சின்னச் சிறுவர்கள்
நீச்சல் பயிற்சியே உடற்பயிற்சியாய் எண்ணி
நீராட குளத்தில் குதிப்பார்
குளமெல்லாம் நன்னீர்
பருகினால் பன்னீர்

ஏற்றம் இறைத்து
உடலை வலுவாக்கும் உழவர் கரங்கள்
உணவும் மிகுதியாய் உண்டு
உள்ளத்தை தெளிவாக்கி
வாழ்வாங்கு வாழ்ந்த காலம்
கனாகாலமே ...!

இன்று ...
அரிதாகி போனது
திணை கம்பு சோளம் வரகு
தெரியாத பிள்ளைகள்
ஏராளம் இழிவாக எண்ணிய
பெற்றோர்களே அதற்க்கு காரணம்

வெயிலும் படாது
உழைக்கவும் விடாது
உடற்பயிற்சியும் செய்யாது
ஆரோக்கியம் தேடும் உலகமடா

வயலை அறிந்திருந்தால்
ஆரோக்கியமெதுவென அறிந்திருக்கும்
நகரத்தின் மோகத்தால்
நரகத்தில் தள்ளிவிட்டீர்
கிராமத்து வயலையெல்லாம்
பல கூராக்கி பணத்துக்கு விற்றுவிட்டீர்

நகரத்தில் நாருதய்யா
நீருக்கும் சோறுக்கும்
காசை தந்து கையேந்தி நிற்கும் அவலம்
காசுக்கு தோசை ஆளுக்கொரு ஆசை
வயிற்றுககுள் கொட்டி
வந்ததய்யா பல கட்டி
மருத்துவருக்கு பணம் கட்டி
மனம் வெந்து நிக்குதய்யா..!

கிராமத்தை எண்ணி எண்ணி
கண்கலங்கி என்ன பயன்?
ஒன்றை இழந்தால் கிடைக்கும் ஒன்று
உண்மை விழிக்குது மெதுவாய்
அரும்பாடு பட்ட பாட்டன் சாபம்
உன்னை வருத்தாமளா போகும்!

சுகம் வேண்டி சேர்ந்தாய் பட்டணத்தில்
சோகத்தில் தவிக்கிறாய்
பணம் தானே உன் லச்சியம்
மனம் நொந்து மருத்துவரிடம்
பல லச்சத்தை கொட்டனும்
ஊரெல்லாம் வெளிச்சத்தில்
மனதுக்குள் கும்மிருட்டு

நான் பிறந்த காலங்களை
எண்ணிப் பார்க்கையில்
அதுவொரு கனா காலமே
நிறைவேற எண்ணமே ...!

எழுதியவர் : கனகரத்தினம் (2-Sep-14, 10:34 pm)
பார்வை : 434

மேலே