முக்கூட்டுச் சாலை முக்தி

பெயர் கேட்கிறார்
கடவுள்....!
ரோஜாவென்கிறது
வளர்த்தது...
ரோசாவென்கிறது
வளர்ந்தது... ரோஜாவை
சூட்டச் சொல்கிறார்
கடவுள்...!
காட்டுப்பூவெல்லாம் கடவுளுக்கு
கூடாதாம்....!!!

காட்டைப் படைச்சது
ஆறு சாமீ....??!!
********************************************

கொடுக்கக் கேட்டிருக்கிறது
புறத்திலொரு கை....
பொறுக்கச் சொல்லியிருக்கிறது
அகத்திலிருக்கும் கை...
எடுப்பதும் கொடுப்பதுமாய்
எப்பொழுதும்
இயங்கிக் கொண்டிருக்கிறது
அகத்துக்கும் புறத்துக்குமாய்
கைகள்....!!!

நெல்லு தூத்துறது
நாங்க... பொங்க வைக்கிறதுக்கு
மட்டும் ஏஞ்சாமி
நீங்க....?!

*********************************************************
தமிழனின் அவலம்....
தெலுங்கனின் தீராவினை...
கன்னடனின் கவலை..
மலையாளியின் மனக்குறை
என.....
எல்லாம் அறிந்திருக்கிறார்
கடவுள்..
சமஸ்கிருத ஒற்றை
ஊட்டல்மொழியின் வழியாக......!!!

குடிசைக்கு பக்கத்துலனா
பேயாம்...
கோபுரத்து உச்சிலன்னா
வாஸ்தாம்...
கல்லுக்கதை தெரியுமா சாமீ....?!

***************************************************************
தேரிழுத்துப் போயிருந்த
சகதிகளில்
புரண்டெழுகிறது சனம்......!!
புண்ணியமாம்....
சகதிகளோடியிருந்த
தெருக்களினுள் வரவே
மறுக்கிறது தேர்....!!!


தேரிழுத்தா வரம்...
தேர இழுத்தாத்தாஞ்
சாமீ...... வரும்...!!!
***************************************************************

எழுதியவர் : நல்லை.சரவணா (3-Sep-14, 9:33 am)
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே