சத்தியத்தின் பாதைகளில்

சருகுகள் ஓசை செய்தால்
அது சங்க நாதம் ஆகாது !
விறகுகளை வெறுமனே எரித்தால்
அது மறையின் வேள்வி ஆகாது !
புரவிகள் கனைத்துவிட்டாலே
போர் என்று ஆகிவிடாது
சத்தியத்தின் பாதைகளில்
செயல்கள் கால் பதித்து நடக்கும் போதே
சரித்திரத்தின் பக்கங்கள்
புதிதாக எழுதப்படும் .
----கவின் சாரலன்