துளிப்பா கொஞ்சம் துடிப்பா

துளிப்பா கொஞ்சம் துடிப்பா

அப்பிராணியை பிடித்து / பிடிக்காமல்
பிரியாணி சமையல்
நரமாமிச பிரியர்கள்!!!

எட்டாது போகுமென்றால்
கெட்டதாகி விடுகிறது
எது... எதுவும்!!!

என்றோ அணிந்த கடிவாளம்
பிடுங்கி எடுக்க இயலவில்லை
குதிரை கால் ஓடிப்பு!!!

கடவுளை குனிந்து தொழுகையில்
கழுத்தை மிதிக்கிறது கால்கள்
கடவுளாய்..... கடவுளே!!!!

கற்பனையில் கட்டிய வீட்டிற்கு
வைக்கோல் பொம்மை எரிப்பு
திருஷ்டி கழிப்பு???

உண்மை பொய்யாய்...
பொய் உண்மையாய்...
அது அதுவாய்... எது??

எழுதியவர் : சொ.சாந்தி (3-Sep-14, 10:44 pm)
பார்வை : 110

மேலே