மயக்கும் மலரின் கலக்கம்

மலர் ஒன்று பூத்ததம்மா
மனம் வீசி திரிந்தமம்மா
மனதோடு கலந்ததம்மா
மங்கையர் மனம் ஈர்த்தம்மா !!

மாலை மங்கும் நேரம்மம்மா
மனதிலே பாரமம்மா
வாடிய மலர் ஆனதாம்மா
வாசத்தை இழந்ததம்மா
வசந்தத்தை தொலைத்தம்மா !!

திசைகள் எட்டும் மறந்தம்மா
திணறி தான் போனதம்மா
தினந்தோறும் கலக்கம்மம்மா
எங்கு தூக்கி எறிவாரோ
எங்கே செல்வேனோ
என்ற கவலையம்மா
இன்றும் மாறலையம்மா !!

எழுதியவர் : யாதிதா (4-Sep-14, 12:23 pm)
பார்வை : 591

மேலே