எங்கே சென்றாய் நீ

நீ இருக்கும் போது
உன் அருமை தெரியவில்லை,
என்னை விட்டு சென்ற பின்னே
உணர்கிறேன்!
நீ என் அருகில் இல்லை என்று!

உன்னிடம் என்னிடம் எவ்வளவு
பாச சண்டை,வெறுப்பு சண்டை
நிகழ்ந்தது என யோசிக்க
எனக்கு தெரியவில்லை!

சந்தனம் குழைத்து புருவ
இடுக்கில் அழகாய் வைத்து
கபடமில்லா புன்சிரிப்பை
உதட்டில் வைத்து
அன்பாய் வீட்டில் எங்களுடன்
சண்டை போட்ட நீ எங்கே?

ஏழு வயதில் என்ன பிழை
செய்தாய் ,ஏன் எங்களை விட்டு
சொர்க்கம் சென்றாய்!

கடவுள் உன்னை அதிகம்
விரும்பினானோ, அதனால்
உன்னை எங்களிடம்
இருந்து பிரித்தானோ?

அம்மா,அப்பா எப்பொழுதும்
உன் நாமத்தை உச்சரிக்க
செய்து விட்டு எங்கே சென்றாய்?

எங்களுடன் சண்டை போட்டு
விளையாட வேண்டிய நீ
மண்ணில் புதையுண்ட காரணமென்ன?

அச்சிறு வயதில் கூட நாட்டிற்கு
நல்லது செய்ய வேண்டும் என்று
காவலன் ஆக காவல்துறை
பற்றி கேட்டு கொண்டே
இருப்பாயே!

நீ இறந்து சம்பாதித்த பணம்
நீதிமன்ற வாசலை விட்டு
வர முடியாமல் தவிக்கிறது!


கல் பட்ட கண்ணாடி போல
எங்கள் மனம் உடைந்து
கிடக்க எங்களை விட்டு
எங்கே சென்றாய்?

ஆசையாய் வளர்த்த ஒரே மகன்
அடிபட்டு மருத்துவமனையில்
இரத்த வெள்ளத்தில் பிணமாய் கிடக்க
புத்தி பேதலித்து நம்
அம்மா அழுகிறாளே!

இருக்கும் இரு மகள்கள்
வேறொருவன் வீடு சென்றதும்
தன் ஒரே மகனே தனக்கு
ஆறுதல் என்று நினைத்த
உன் அன்னைக்காகவாது
நீ உலகை விட்டு
செல்லாமல் இருந்து இருக்கலாம்!

ஒவ்வொரு குறும்பான பையனை
பார்க்கும் போதும் அவள் மனம்
உன்னை நினைத்து படும்
பாடு அனுபவிக்கும்
அவளுக்கு மட்டுமல்ல
பார்க்கும் அனைவருக்கும்
தெரியும் மகன் இல்லா
அவள் ஏக்கம்!

அவளுக்கு யாரடா ஆறுதல் தருவார்கள்
அப்படி ஆறுதல் தந்தாலும் நீ
மீண்டும் வருவாயா என்ன?

உன் நினைவால் அழும் அவளுக்கு
என்ன தான் விடை?

மற்றவர்கள் தன் தம்பியுடன்
விளையாடும் போது
உன் நினைவுகள் எங்களை
கொள்வது ஏனோ?

உன்னை விழுங்கி விட்டு இன்னும்
அந்த பேருந்து ஓடிகொண்டு தான்
இருக்கிறது யார் உயிரை எடுக்க
என்று தான் புரியவில்லை!

உன்னை புதைக்கும் தருவாயில்
கூட உன் முகம் பார்க்க
எனக்கு ஏனோ கொடுத்து வைக்கவில்லை!

உன் புகைபடம் பார்க்கும் போது
அக்கா,
நான் உங்களுடன் தான்
இருக்கிறேன் என்று கூறுவது
போல் உள்ளதடா!

யார் கருவுற்றிருந்தாலும் உனக்கு
ஆண் பிள்ளை பிறப்பான் என
ஏக்கத்துடன் சொல்கிறாள் நாம் அன்னை
ஏனடா எங்களை விட்டு சென்றாய்?

தீபாவளி பட்டாசு வெடித்து
விளையாடிய உன்னை
ஊருக்கு அழைத்து சென்று
விதி விளையாடியதே ஏனோ?

ஊரில் இருந்து
வரமாட்டேன் என்று சொன்ன
உன்னை வலுக்கட்டாயமாய்
அழைத்து வர சொன்னோம்

அவனை நாங்களே கொன்று
விட்டோம் என்று நம்
அம்மா,அப்பா வருந்தி கிடகின்றன
அவர்கள் கண்ணீருக்கு பதில் என்னடா?



குறிப்பு:என் தம்பிற்காக இக்கவிதையை சமர்பிக்கிறேன்.இப்பொழுது அவன் எங்களுடன் இல்லை என்றாலும் அவன் ஆன்மா எங்களை சுற்றி கொண்டே உள்ளது என நம்புகிறோம்.

எழுதியவர் : கௌசல்யா (4-Sep-14, 7:25 pm)
Tanglish : engae senraai nee
பார்வை : 570

மேலே