கனவுகளை கரைத்தே
கடற்கரை மணலில் அழகான வீடு
கட்டப்படுகிறது மணல்கொண்டு
அடிக்கின்ற அலைக்கு தெரியுமா
கரைக்கு தான் சென்றால்
காணாமல் போகும் வீடென்று
ஆர்பரித்து வந்தது அழகான
வீட்டை ஆழமானகடலுக்குள்
தெரியாமல் கரைத்துச் சென்றது
நாமும் எத்தனையோ கனவுகளை
கரைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
சம்பந்தமில்லாத பல மனிதர்களாலே...