எத்தர்கள்

சோலை வனத்தில்
குயில் கூவும் மயில்
ஆடும் மான்கள்
துள்ளும் வண்ண
வண்ணமலர்கள்
கண்ணைக் கவரும்
கள்ளத் தேனீ
தானாகப் பறக்கும்
காதல் ஜோடிகள்
ஓரமாய் ஒதுங்கி
அரட்டை அடிக்கும்..!!

காடு வனாந்திரத்தில்
ஆந்தை பறக்கும் நரி
ஊளையிடும் பன்றி
கிண்டும் பாம்பு ஊறும்
சீறும் புலி விரட்டும்
திருட்டு மரம் லாரி
லாரியாக ஏற்றுவான்
திருடர் கூட்டம் போடுவான்
நிம்மதியாய் குட்டித் தூக்கம்..!!

பழத் தோப்பில் கிளிக்
கூட்டம் கூடி அமரும்
அணில் அன்பாய் ஓடி
வரும் வௌவால்
தினமும் மரத்தை அளந்து
வரும் குரங்குக்கூட்டம்
கனியை அழிக்க வரும்
பணம் பறிப்பவன் கோப்போடு
வருவான்...!!

வேளாண்மை நிலம்
பச்சைச் சோலை
இச்சை ஊட்டும்
வேளாண்மை ஓலை
நாணத்தோடு தலை
குனிந்து நிக்கும் குமரி
போல் நாத்தோடு நெல்
கதிர்கள் இருக்க தன்
இனம் பெருக்க சிட்டுக்
குருவி தேடி வரும் திருடி
உண்ண சுண்டெலிக்
கூட்டம் நாடி வரும்..!!!

பாலைவனத்தில் காற்று
வேகம் அதைத் தாங்க
முடியாமல் மண்ணும்
பறக்கும் நெடும் தூரம்
நடை பழகும் ஒட்டகம்
அதில் அமர்ந்திருப்பான்
நல்லவன் பாதை மறைக்கக்
காத்திருப்பான் ஒட்டகக்
கடத்தல் கும்பல் கலங்கி
தயங்கி நிற்பான் ஏறிச்
சென்ற எஜமான்....!!

சோலைவனத்தில் கள்ளக்
காதல் தேனீ
காடுகளில் திருட்டு மரக்கும்பல்
பழத்தோட்டத்தில் திருட்டு
வௌவால்
வேளாண்மையில் திருடன்
சுண்டெலி
பாளைவனத்தில் ஒட்டகக்
கடத்தல்
எங்கும் திருட்டு எதிலும்
புரட்டு எங்கும் முகமூடி
அணிந்த உயிர்களே
அதை உணர இன்னும்
இல்லை நேரமே..!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (4-Sep-14, 4:24 pm)
பார்வை : 116

மேலே