ஆசானுக்கு வாழ்த்துக்கள்
தாயின்
இரத்த தொடர்புகள்
தொப்புள் கொடி
அறுத்தலோடு அறுந்து போக ...
தட்டுத்தடுமாறி
கையூன்றி கரணமடித்து
எழுந்து நின்று
பிஞ்சு விரல்கள்
சுவரிலும் கதவிலும்
கிறுக்குகையில்
பிறப்பது தானே
எழுத்தின் முதல் பிரசவம்...!
கிறுக்கல் தானே
எழுத்தின் முதல் குழந்தை ...!
மவுனம் உடைத்து
உதடுகள் ஒலியை
பிரசிவிக்கையில்
பிறப்பது தானே
மொழியின் முதல் குழந்தை ....!
எழுத்தும் மொழியும்
ஏற்றம் பெற
அப்பாவின் விரல் பிடித்து
பாடசாலைக்கு பயணிக்கையில்
அங்கே
தெய்வங்களாய் ஆசான்கள்....!
கோவில்களில்
தெய்வங்கள் பேசுவதில்லை
மன சாட்சிகளே
மவுனமாக உலா வரும் பொழுது
பாடசாலைகளில்
பேசும் தெய்வங்களாய் ஆசான்கள்......!
உயிர்
மெய்
ஆயுத எழுத்துக்களை
மனதில் பதியம் போட...
எண்ணமும் சொல்லும்
செயல்களாய்
எழுந்து நடை பழகி
உலக நந்தவனத்தில்
பூ பூத்து சிரிக்கிறது வாழ்க்கை ...!
தலைமுறை
விழுதுகளை
ஊருக்கு அடையாளம்
காட்டினாள் தாய் ...
உலகுக்கு அடையாளம்
காட்டியது ஆசிரியர் தானே .....?
வாழ்க
பாடசாலை ஆசான்கள் ...!