வேண்டாம் சகுனம்
சகுனம் பார்த்து...
சகுனம் பார்த்து ..
சடங்கு செஞ்ச-மனிதா
பல்லி சகுனம் சொல்லி
பல நாளு ஆயிருச்சு..
பட்டினியா நீ கிடந்ததும்
வெகுநாலு ஆயிருச்சு..
முக்குல சகுனம் இருக்குனு
முன்னோர்கள் சொன்னங்க..
உன் மூச்சுல சனி இருக்குனு
உனக்காரும் சொல்லலியே..
பூனைதான் குறுக்க போச்சு
உன் வேலைதான் நின்னு போச்சு..
முட்டாளா நீ நின்னா
பூனை என்ன செயும்
புது மனிதா...
பசியில அழுகுர புள்ள
பால் குடிக்க சகுனம்
பார்க்கவில்ல..
பாசத்துல தாயும்
பஞ்சாங்கம் பாரக்கவில்ல..
மழலை பேசும் பேச்சுக்கு
சகுனமில்ல...
மகிழ்ச்சி தரும் நேரத்துக்கு
சகுனமில்ல..
கிழமைக்கு என்ன தெரியும்
நீ சகுனம் பார்ப்பேன்னு..
கடிகாரத்துக்கு என்ன தெரியும்
நீ- நல்லநேரம் பார்ப்பேன்னு..
கடிகாரம் நின்னுபோச்சுனா
எங்க போயி சகுனம் பரப்ப..
உன் நேரம்தான் நின்னு போச்சுனா
யார போயி நீ பரப்ப..
வேண்டாம் சகுனம்...
வேண்டும் ஞானம் ..
ம.முஹயத்தின்