கனவினையும் மறந்திடச்செய்திடுதே
தேர்வு எழுதினேன்தேர்ச்சிபெறுவேன்
என்பதில்தயக்கமில்லை மதிப்பெண்ணும்
நன்றாகவே பெற்றிடுவேன் தாய் தந்தையரோ
தினம்கூலிவேலை படித்து மதிப்பெண் பெறுவதை
பார்த்து பூரிக்கும் உள்ளங்கள்மேற்கொண்டு
படிக்க வைக்க இயலாமல் படும்பாடு
என் சிந்தனையை வேறுபக்கம் திருப்புகிறதே
ஓய்வின்றி உழைத்து களைத்த உடல்களுக்கு
மேலும் உழைப்பை கொடுத்து வருத்த
மனம் மறுக்கிறதே படித்த படிப்பையும்
படிக்கும் கனவினையும் மறந்திடச்செய்திடுதே
தேர்வு மதிப்பெண் வருமுன் வேலைஒன்றை
விரைவாகத் தேடிவீட்டுக்கு நல்ல மகனாக
மாற காலை விடியலுக்காக நான் காத்திருக்கிறேன்
நித்திரை இழந்து உழைப்பின் களைப்பில்
ஆழ்ந்து உறங்கும் தாய் தந்தையைப் பார்த்தபடியே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
