பட்டம் படித்திட ஆசை
பட்டம் படித்திட ஆசை
அம்மா அப்பா ஆசைப்படி
படிக்கவா என் விருப்பப்படி
படிக்கவா குழப்பத்திலே நான்
அம்மா சொல்கிறார் மருத்துவம்
படியென அப்பா சொல்கிறார்
பொறியியல் அதும் கனிணி
படி கை நிறைய வருமானம்
என்கிறார் தேர்வுமுடிவு
வரும் நாளை எதிர்பார்த்து
நான் என் மதிப்பெண் என்ன
படிக்கச்சொல்கிறது
என்பதை அறிந்து கொள்ள
கவலையுடன் காத்திருப்பதை
தெரிந்து கொள்ளாமலே தங்கள்
விருப்பங்களை திணிக்கும்
இவர்களை திருத்த கடவுள்
தான் மறுபடியும் மனித
அவதாரம் எடுத்து
வர வேண்டும் போல இருக்கு