வாழ்த்து

தவிக்கும் உள்ளங்களின் தவிப்பையும்
துடிக்கும் இளைஞனின் லட்சியங்களையும்
சீர் திருத்தவாதிகளின் கனவுகளையும்
போராளிகளின் முயற்சியையும்
பெற்றோர் மேல் உள்ள பாச உணர்வுகளையும்
எதிர்கால ஆசைகளையும்
காதல் தவிப்புக்களையும்
கண்ணீர் கதைகளையும்
வாழ்க்கை அவலங்களையும்
நினைத்தது நடக்க வில்லை என்ற ஆதங்கத்தையும்
தன் விரல் நுனியாலே எழுது கோல் கொண்டு கவி வடிக்கும்
உள்ளங்களின் அவாவை எண்ணங்களாக உலகுக்கு
அறிமுகம் காட்டும் தமிழ் தாய் ஈன்றெடுத்த கவிப் பேரராசர்
மீராஅவர்களும் எழுத்தாளர்களின் முகமே காணாமல்
உயர் புகழ் பெற்றுத் தந்து வளர்க்கும் வளரி நூலகமும்
வாழ்க வளர்க ஓங்குக உன் புகழ் உலகமெங்கும்

குறிப்பு ==இவ் மாதம் வெளியான வளரி மாத இதழில் எனது கவியும் பாராட்டுப் பெற்று வெளியிடு கண்டது மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்
வளரி ஆசிரியருக்கு

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (7-Sep-14, 12:11 pm)
Tanglish : vaazthu
பார்வை : 76

மேலே