இமைகளை திறந்தால்

உனக்குள் என்ன
தயக்கம் -உன்
மனதில் என்ன
மயக்கம் - இந்த
மயக்கம் தயக்கம்
இரண்டையும் நீக்கு
உலகம் உன்னை
வியக்கும்
கிளியென்பார்நீ
பிறந்தால் -தலை
வலியென்பார்நீ
வளர்ந்தால் -இந்த
மனிதரைத் தூக்கி
தீயில் வை
நீ
அடிமை என்பதை மறந்தால்
அடங்கி வாழ்ந்ததும்
போதும் -
வீட்டில்அடைந்து கிடந்ததும்
போதும்-
நீ
துணிந்தால் உந்தன்
எதிரில் நிற்க
உலகில் இல்லை ஏதும்
புதைத்தால் மனிதன் சாவு -
விதைகள்
புதைத்தால் அதற்கு
வாழ்வு -
நீ
வாழ்வா ? சாவா?
ஒன்றை எட்டு
அதுதான் உனக்குத்
தீர்வு
கண்ணால் வரைஒரு
கோடு -அதில்
விண்ணைக் வளைத்துப்
போடு - உன்
நெற்றிப் பொட்டில்
நிலவை ஏந்தி
பெண்ணின் சுதந்திரம்
பாடு
வேர்வை(யை)க்காட்டு
உழைப்பால் -
உன்
பார்வை(யை)க்காட்டு
நெருப்பால் -
உனை
ஏளனம் செய்யும்
மனிதனைக் கண்டால்
எடுத்து அடிஉன்
செருப்பால்
விதியை நம்பும் நிலையை -
அகற்றி
மதியைச் செய்வாய் சலவை -
நீ
அறிவும் துணிவும்
இரண்டும் சேர்ந்த
ஆதாம் ஏவாள்
கலவை
அடிமைச்சிறையை
உடைத்து -தடையைப்
பொடிபடச் செய்வாய்
இடித்து - இனி
செயற்கைக் கோளில்
பயணம் செய்நீ
புதிய உலகினைப் படைத்து
உண்மை என்பது
கணிதம் -
உன்
பெண்மை என்பது
புனிதம் -
அந்த
பெண்மை கொண்டு
உலகை வென்று
கடவுளுக் கெழுது
கடிதம்
பிறப்பைத் தந்ததும் நீதான் -
காதல்
சிறப்பைத் தந்ததும் நீதான் -
அன்று
கருப்பை வழியே
காற்றை அனுப்பி
மூச்சைத் தந்ததும் நீதான்
பெண்ணே உன்னால் முடியும்
உலகம்
உன்னால் பெருமை அடையும்
- நீ
இமைகளைத் திறந்தால்
இரவில் கூட
சூரியன் வந்து விடியும் !

எழுதியவர் : fb (7-Sep-14, 11:52 am)
பார்வை : 72

மேலே