பிச்சை

கை எடுத்து
கும்பிட்டு கேக்கறேன் .....
எதாவது வேலை
இருந்தா சொல்லுங்க ...
உழைக்க
மனசுலே
தெம்பு இருக்கு.....
அடுத்தவங்க
உழைப்புலே
வாழ இஷ்டமில்ல தம்பி !
என்னாலே
என்ன செய்ய முடியும்ன்னு
யோசிக்கரீங்களா ?
வாசல் தெளித்து
கோலம் போடுவேன்
கல் தூக்குவேன்
வீடு சுத்தம் செய்வேன்
குப்பை வாருவேன்
பூ கட்டுவேன்
பாத்திரம் கழுவுவேன்
பாக்கிங் செய்வேன்
காசுக்கு
பிச்சை கேட்கலே தம்பி
வேலையை தான்
பிச்சையாய் கேட்கின்றேன்
கடைசி வரை
சுயமா உழைக்கணும்
என்பது தான்
என் குறிக்கோள் தம்பி !!
பார்த்துட்டு சொல்றீங்களா ?????
---------------------------------------------------------------------------------------------------------
சுய காலில் நிற்க நினைக்கும்
முதிய பெண்மணியின்
கம்பீரமான குறிக்கோளுக்கு
தலை வணங்குவோம் !