இளமைக்கல்வி இனிதுதான்
சொர்கத்தை சொர்கமென
சொல்லாமல் தந்ததால்..
உயிருக்கு உருவம்தந்து
நட்பென காட்டியதால்..
தோழியரின் கண்பார்த்துபேசும்
தூயமனம் தந்ததால்..
கரவொலிச் சுகம்தந்து
கவியென போற்றியதால்..
அடிக்கும் பிரம்பிற்கும்
அன்புன்டெனக் காட்டியதால்..
முதற்காதல் முகம்பார்க்க
முதலுதவி செய்ததால்..
இளமைக்கல்வி இனிதுதான்