கவி அந்தஸ்த்து

நிலவொளி பின்தொடர
வந்தாய்
நிலமகள் மேல் நீ படர்ந்து
கொண்டாய்
கொடிமலர் சாய்ந்திருக்க
நெடுமணம் பறந்திருக்க

தென்றல் தனை
மூங்கில் அது
மூச்சிறைத்து முனகுதடி
மெல்லிசையை

முத்தமிழ் அறிந்தவனும்
எக்கவி புரிந்தவனும்
வார்த்தைகளற்று போகுவரே
நிந்தன் இந்த நிலை
காணுகையில்
யான் மட்டும் விதிவிலக்கா
நின்னை இயற்ற சொல்லி நிர்மூலம் ஆக்குகிறாயே என் கவி அந்தஸ்தை

எழுதியவர் : கவியரசன் (8-Sep-14, 7:38 pm)
பார்வை : 73

மேலே