ப்ரியாவின்-மௌன மொழி

ப்ரியாவின் மௌன மொழி...!

தனிமையிலொரு மரம்
கால்தடங்களில்லாமல்
நடந்து கொண்டிருந்தது
சருகுகள்.........!!

****************************************

மாலை நேர
மழை நாள்......
சொர்க்கம் கவனிக்கிறது
தனிமையின் அமைதியை.......!!

*******************************************

வசந்தம் காத்திருக்க
காற்று கதகதக்க
இதய இலைகள்
மெதுமெதுவாய் உதிர்கின்றன..........!!

********************************************

வசீகரம் மௌனங்களில்
பெரும் ரகசியம் கீதங்களில்
கை ரேகைகள்
தொலைந்தது
பனிப்பூ தீண்டும் போது.....!!

*********************************************

குத்திக்கிழித்து விட்டு
அழுதது முள்ளொன்று
ரோஜாவின் பிரிவு தாளாமல்..........!!

**********************************************

மௌங்களில் சப்தமாக
பேசிக்கொள்ளும் போது
சப்தங்கள் மரணிக்கக்கூடும்.......
-எச்சரிக்கை.......!!

-ப்ரியா

எழுதியவர் : ப்ரியா (8-Sep-14, 9:03 pm)
சேர்த்தது : PRIYA BALASARAVANAN (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 90

மேலே