வாழ்க்கை வரட்டும் என் காதலுக்கு
வருத்தமில்லை நீ விலகினால்
திருத்தமில்லை என் காதலில்
கருத்துமில்லை உன் மௌனத்தில்
விடை வருமோ என் மரணம் முன்
கவிதையில் காதல் சொல்லி
விழிகளால் என் ஆசை சொல்லி
தூதுமூலம் கடிதம் அனுப்பி
மௌனம் விளக்க முடியாமல் நான்
மரணம் கொடு உன் மௌனத்திற்கு
வாழ்க்கை வரட்டும் என் காதலுக்கு