கிட்டத்தட்டக் கொன்றுவிட்டாய் காதலே-வித்யா
கிட்டத்தட்டக் கொன்றுவிட்டாய் காதலே-வித்யா
மழையின் முதல்துளிபருகி
பூமி தாகம் தீர்த்த போது
ஒருவித சுகந்தம்
எங்கெங்கிலும் பரவியது ..........!!
அச்சுகந்தம் என்னிதயம்
தட்டியபோதுதான்
ஒரு புதிய காதல் ஜனித்து
பிஞ்சுவிரலால் தீண்டியதென்னை.......!!
=========================================================
சூரியனின் கன்னிக்கதிர்கள்
முதல் முதலில் பூமிதழுவி
காதலின் கதகதப்பை பரப்பியது
அநேகமாக இக்கதகதப்பிற்காகவே
பூமி நெடுங்காலம்
காத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.....!
இக்கதப்பு எனை
தழுவியபோது
நான் காதலோடு
முதன்முதலாகப் பேசினேன்........!
========================================================
குறும்புக்காரப் பட்டாம்பூச்சிகள்
எனை பைத்தியமென
கேலிசெய்து
சிரித்துக்கொண்டிருந்தன........!!
பாவம் காதலின்
சுகந்தங்கள் தீண்டாத
துரதிர்ஷ்டசாலிகளிவையென
நானும் சிரித்துக்கொண்டேன்........!!
==========================================================
அழகிய பூக்களெல்லாம்
காதல்போதையை
தன் நறுமணத்தால்
பரப்பிக்கொண்டிருந்தது....... ..!!
காதலின் வேள்விகள்
எனைச்சுற்றி
அமைக்கப்பட்டிருப்பதாய்
ஒரு மாயை......!!
============================================================
ஆர்ப்பரிக்கும் அலைகள்
ஓடிவந்து என்மீது
நீரை வாரி இறைத்தன....!!
நீரிரைக்கப்பட்ட
மணல்மீதிருந்த
என் பாதங்கள்
சறுக்கிக் காதலில்
விழுந்துவிட்டேன்
எனையறியாமலே..........!!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
எனை இறுகப்பிடித்து
அதன் இதயத்தில்
அடைத்துக்கொண்டது
-காதல்...................................!!
இதன் பிடியிலிருந்து யாரும்
தப்பவே முடியாது போல.......!!