அம்மா அம்மா
அம்மா அம்மா
என் ஆசை அம்மா
என் உயிர் ஓசை நீ தான் அம்மா
அம்மா என் ஆசை அம்மா
என் உயிர் ஓசை அம்மா
சும்மா சும்மா நீ இல்லையென்றால்
நான் சும்மா அம்மா
அம்மா அம்மா
பத்து மாசம் வயிற்றில் சுமந்தவளே
உனை மொத்த மாசமும் நெஞ்சில் சும்ப்பேனே
அம்மா அம்மா
நீ வேணும் அம்மா
நீ இல்லா நா சும்மா அம்மா
நான் வாழ உலகம் காண்பித்தாய்
உயிர் வாழ ரத்தத்தை பாலாய் தந்தாய்
நித்தம் நித்தம்
என் மேல் பித்தாய் ஆனாய்
உன் ஆசையை அடியோடு மறந்தாய்
என் ஆசைக்காக வியர்வையாய் வடிந்தாய்
அம்மா அம்மா என் ஆசை அம்மா
என் உயிர் ஒசை அம்மா
படிக்காத மேதை அம்மா
பார்க்காமலே படிக்கிறாய் என் இதயத்தை நீ தான் அம்மா
துடிக்காத மற்றொரு இதயம்
நீ தான் அம்மா
அம்மா அம்மா
நீ இல்லா நா சும்மா அம்மா