இளமையும் முதுமையும்

ஒரு நாள் என் இளமைப் பருவத்தில் எனது தாயை ஏதோ ஒரு காரணத்தினால் கடுமையாகப் பேசி விட்டேன். உடனே எனது தாய், ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு கண்ணீர் வடித்த வண்ணம் என்னை நோக்கி கூறினார்.
"சஆதியே" உனது குழந்தைப் பருவத்தை நீ மறந்து விட்டாய் என்னோடு சப்தமிட்டு பேசக் கூட சக்தியற்ற நிலையில் அப்பாவித்தனமாக என் மார்பில் அப்போது நீ சாய்ந்து கிடந்தாய்.
அந்த நாட்களை சற்று இப்போது நீ நினைத்து பார்! இப்போது சிங்கத்தைப் போன்ற பலமும் யானையைப் போன்ற வலிமையும் பெற்றவனாக இருக்கிறாய் அதனால் இவ்வாறு உன்னைப் பேசத் தூண்டுகிறது.
இதற்க்கு காரணம் நான் முதுமை அடைந்து அப்போதைய உனது பலவீனத்த இப்போது நான் அடைந்ததுதான்" என்றாள்...