எதற்கு

ஒரு பிளாட்பாரவாசியின் குடும்பம். பொன்னிற மதிய வெயில் சட்டென்று மாறி கருமேகமாய் உருண்டு
திரண்டு மழையாகக் கொட்டத் தொடங்கியது.
தாமு என்கிற சேவல்.. அவன் நனையாதபடிக்கு முதுகையே வில்லாக வளைத்த நிலையில் அஞ்சு வயசு
தாமினி. தன் பாதி சேலையை உருவி தாமினியைப் போர்த்தி அவளை நெஞ்சோடு பொத்தியபடி
தாமினியின் தாய் பார்வதி; பார்வதியை தோளோடு அணைத்து பழைய தகரத்தை கோவர்த்தன கிரியாய்
ஏந்திக் கொண்டு அவர்கள் குடும்பத் தலைவன் பரசு...
ஒருத்தருக்கொருத்தர் புலப்பட்ட இதயத் துடிப்பு; வளைய வந்த மெல்லிய மூச்சுக் காற்று.
மழை ஒரு வழியாகப் பெய்து ஓய்ந்தது. குடும்பத்தினர் அப்பாடா என்று விலகினர். மழையை ஜெயித்த
சந்தோஷம் அவர்களுக்கு.
எனினும் தாமு முதற் கொண்டு எல்லோரும் சொட்டச் சொட்ட நனைந்திருந்தனர் எனில் அவ்வளவு
நேரம் அரவணைத்து நின்றது எதற்கு?