குழந்தையின் சினுங்கல்

இரசனை இல்லாத என்னை
இரசிக்க வைத்த இசை !

புலவன் என்று நினைத்த
எனக்குப் புரியாத மொழி !

விளக்க உரை இல்லாத
வினோத இலக்கியம் !

விலை கொடுத்து வாங்க
இயலா பொக்கிஷம் !

எந்தன் இரவைப் பகலாக்கிய
இன்னொரு சூரியன் !

தளிர் நடை போட்டு என்னைத்
தாவியணைக்கத் துடிக்கும்
என் குழந்தையின் சினுங்கல் !

எழுதியவர் : முகில் (9-Sep-14, 11:44 pm)
பார்வை : 339

மேலே