கண்களிலே நீ மொழி பேசும் போது
கண்களிலே நீ மொழி பேசும் போது
வாய் ஏனோ மௌனிகிறது!
இதழ்களுக்கு சற்று வேலை கொடுத்தால்
உன் விழிகள் ஓய்வு கொள்ளும் அப்போது!
நீ புன்னகை புரியும்போதும் உன்
கண்களே பேசுகின்றன!
உன் கண்களே சிரிகின்றன!
போலியான இதழ் சிரிப்பு
வேண்டாம் என்று விட்டுவிட்டு
கண்களிலேயே மட்டும் சிரிகின்றாய் போலும் !
இதழ்களின் மௌனமே!
உன் பார்வைகுள்ளே நான்
சொர்கத்தை காண்கிறேன்
ஓர் பாதையினை காண்கிறேன்!
மௌனமே இத்தனை சுகமென்றால்
மலரே நீ பேசினால்
என்னையே நான் மறப்பேன்!
என் உணர்வு நெருப்புகள்
உன் பார்வை பட்டதும் குளிர்ந்து
போகின்றன!
என் நெருப்பு வாழ்க்கை
உன் பார்வை பனி துளிகளால்
குளிர்ந்து போகின்றன!
மனம் கொதிக்கும் நேரத்திலே
உன் நினவு ஆற்றில் நான்
நீந்தும் போது ஆறுதல் கிடைக்கும்
இருந்தாலும்...!
உன் பார்வை அருவி தான்
என்னை நிம்மதி ஆக்கும்!
உன்னை பார்த்த பின்னே
நான் நிலவு பற்றி சிந்திப்பதில்லை!
உன் இரு கண்களும் எனக்கு இரு
நிலவுகள் என்பதால்!
வெள்ளை நிலவது ஒளி தருவதிலே
வியப்பில்லை எனக்கு!
உன் கண்கள் என்னும் இரு நிலவுகளை
காண காண வியக்கிறேன்!
வண்டுகளை நான் மறந்துவிட்டேன்
உந்தன் இமை மலருக்குள் இரு
வண்டுகளை விழிகளாக பார்க்கிறேன்!
நீ என்னை காண தவறும் போது!
இக்கண் மொழிகளை யார்தான் உனக்கு
சொல்லி தந்தனரோ!
உலகிலே அதற்கு நிகரான மொழிகளை
என்னால் சொல்ல முடியவில்லை
எத்தனையோ மொழிகள் நான் அறிந்தும் கூட!