என் நண்பர் சிராஜ் பற்றி

சும்மா .....

கேட்கும் உதவிகளை கேட்டதும் செய்திடுவார்
யார்க்கும் இலையென்று சொல்வதில்லை-ஊர்க்கு
உழைப்பவர் மத்தியில் உண்மைக் குழைக்க
அழைப்பவர் அண்ணன் சிராஜ்.

ஆளில் பெரியாள் அரவணைப்பில் அன்னைதான்
தாளில் எழுதிடத் தான்முடியா- கேளிக்கை
விட்டு தினந்தினமும் வேகமாய் ஏறிவரும்
துட்டுக் கடையே சிராஜ்.

சித்தம் தெளிந்தவன் சீர்திருத்த வாதிதான்
நித்தம் உழைப்பை நினைப்பவன் - இரத்தம்
கொதித்தால் குமுறுவான் கோபத்தில் திட்டி
மிதிக்கத் துடிக்கும் சிராஜ்.

எழுதியவர் : அபி மலேசியா (12-Sep-14, 1:00 pm)
பார்வை : 139

மேலே