கம்மங் கதிரு கவிதை

*
காடுகழனிப் பார்த்து ரொம்ப
வருஷமாச்சின்னு
காலார நடந்துப் போய்
பார்த்து வரலாமுன்னு
நினைச்சி புறப்பட்டுப் போனேன்.
பச்சை பசேல்லுன்னு அங்கே
பசுமையான அழகு காட்சி.
வரப்பிலே நடந்து போகையில்
குருவிங்களெல்லாம் உற்சாகமா
தலைக்கு மேலே பறக்கின்றன.
வரப்பிலிருந்தவாறே
செண்டாக முதிர்ந்த ரெண்டு
கம்மங் கதிரை கைநீட்டி பறிச்சி
உள்ளங்கையில் வைச்சி
நுமிட்டி நுமிட்டி ஊதி ஊதி
வாயிலிட்டுச் சுவைத்தேன்
பச்சைக் கதிரி்ன் பால்சுவை
அத்தனையும் ருசியான
தெவிட்டாத தேன்சுவை.
செழிப்பான மண்ணின்சுவை.
மீண்டும் நடந்தபோது எதிரில்
எதிர்ப்பட்டது என் மாணவப்
பருவத்து காதலி.
அவள் இன்று இரண்டு
குழந்தைகளின் தாய்.
அவளின் அழகு முன்னைவிட
மங்கலமாய் பிரகாசிக்கின்றது.
அவளை நலம் விசாரித்து
அவளுக்கே தெரியாமல்
கண்ணீர் வெளியி்ல் தெரியாமல்
வரப்புப் பார்த்து வழிநடந்தேன்
பசுமையான நினைவுகளோடு…!!.
*.

எழுதியவர் : ந.க.துறைவன் (13-Sep-14, 9:38 am)
பார்வை : 73

புதிய படைப்புகள்

மேலே