அம்மாவின் அன்பு

லட்சுமி: என் மகன் ரொம்ப தங்கமானவன் தெரியுமா?
என்று பெருமிதமாக பேச தொடங்கினாள்.
எதிரில் கேட்டுகொண்டிருந்தாள் காமாட்சி.
"அப்படியா?"வியந்தாள் காமாட்சி.
"பின்னே, என் பையன் நான் இல்லாம தூங்கவே மாட்டான்,என் மேல அப்படி ஒரு
பாசம்"இன்னும் தொடர்ந்தாள்.
உடனே காமாட்சியும் பேசினாள்.
"என் பையன் மட்டும் சும்மாவா? காலையில நான் போய் எழுப்புனாதான் காபியே குடிப்பான்"
அவளுடைய பங்குக்கு சொன்னாள் காமாட்சி.
"ஒ அப்படியா! உன் பையன் எங்க வேலை பார்க்குறான்?" லட்சுமி கேட்டாள்.
"அவன் பேங்க் ல பெரிய ஆபிசரா இருக்கான், உங்க பையன் "?
"என் பையன் வெளிநாட்டுல வேலை செய்யுறான்...பாவம் என்ன சரியாய் சாப்பிட்டான? இல்லையானு தெரியல, மாசத்துக்கு ஒரு தடவை தான் வர்றான்". என்று ஏக்கத்தோடு சொல்லிக்கொண்டு
கண்ணீர் விட ஆரம்பித்தாள்.
"கவலைபடாதிங்க, நம்ம பசங்களுக்கு எந்த பிரச்னையும் வராது அந்த கடவுள் இருக்கான்..,நான் போய் சமைக்கிறேன் .." என்று இருவரும் அவரவர் வேலையில் ஈடுபட ஆரம்பித்தனர்.
அந்த முதியோர் இல்லம் அவர்களின் மகன்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது.

எழுதியவர் : மு.தேவராஜ் (14-Sep-14, 10:52 am)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : ammaavin anbu
பார்வை : 345

மேலே