எதற்காய் செய்கிறாய் இப்படி - இராஜ்குமார்

எதற்காய் செய்கிறாய் இப்படி
===========================
விழியில் தேன்ற மறுத்தாய்
எனது சோம்பல் முறித்தேன்
செவியில் இசைக்க வெறுத்தாய்
எனது வீண்பேச்சு முடித்தேன்
இரவில் உறக்கம் உடைத்தாய்
எனது நிலையை உயர்த்தினேன்
உருவம் முறைத்து கிழித்தாய்
எனது பருவம் முடக்கினேன்
கன்னத்தில் அறைந்து திட்டினாய்
எண்ணத்தின் உனைஅடுக்கி நிறைத்தேன்
மொத்தத்தில் தூக்கி வீசினாய்
ரத்தத்தில் உனைஊற்றி வாழ்ந்தேன்
எனையே சிதைத்து எரித்தாலும்
அச்சாம்பலில் உனையே ரசிப்பேன்
உயிரை பிடுங்கி சென்றாலும்
காதலில் சிறகாய் முளைப்பேன்
- இராஜ்குமார்
நாள் : 4- 6- 2011