அடங்கவே மாட்டீர்களோ - சந்தோஷ்

அடங்கவே மாட்டீர்களோ ?
----------------------------------------------

பெண் என்று
பிறந்துவிட்டேனாம்
ஆண் என்பவர்கள்
அடக்குமுறையாளர்களாம்
நான் என்றுமே
அஞ்சியே முடங்கவேண்டுமாம்.

அடே...
ஆணாதிக்க முட்டாளே..!
என்னைப்போலவே
ஏதோ ஒரு விந்துத்துளியில்தானே
நீயும் பிறந்து இருப்பாய். -கருவிலே
விரல் முளைத்து
கால் முளைத்து
இதயம் துடித்து
இறுதியில்
என்னைப் போலவேதானே
உனக்கும் மயிரும் முளைத்திருக்கும்.

உனக்கு பிறப்பிக்காத
கற்புச்சட்டம்
வயதுக்கு வந்த
எனக்கு மட்டும் ஏனடா?

எனக்கு
மார்பு பெருத்திருக்கும்
உனக்கு
மீசை முளைத்திருக்கும்

எனக்கு
வெளிநீளாத பிறப்புறுப்பு
உனக்கு
சில செ,மீ விளைந்தால்
நீ
ஆணாதிக்கவாதியோ
நான்
அடங்கும் ஜாதியோ..!
எவர் எழுதியது
இந்த நீதியோ?

உடை இழுத்து
நான் மூடவேண்டுமாம்
இடை தெரிய
கூடாதாம்
நடையளந்து
தலைக்குணிந்து
நளினமாக நடந்திட வேண்டுமாம்.
மாராப்பு விலக கூடாதாம்
மார்புமடிப்பு தெரிய கூடாதாம்.
கலாச்சாரம் பறிபோயிவிடுமாம்.

அட ஆணாதிக்க பேடிகளே
எனதருமை காமநாய்களே..!
ஏன் இப்படி
கலாச்சார குரலில்
லொல் லொல்வென்று
குரைத்து கத்தி தொலைகிறீர்...!

கற்பு என்ற
உறுப்பு பெண்ணுக்கு
எங்குள்ளது...?
மார்பிலா.. ?
அணியும் ஆடையிலா?
அல்லது
உன் ஆண்குறிக்குள்
இல்லாத கற்பு
என் யோனியிலிருக்கிறதா ?

பதில்களை கொண்டுவாருங்கள்...!

நான் அணியும்
நாகரீக உடையில்
கலாச்சாரம்
விலைப்போகிறது
என்றவர்களே...!
ஆணாதிக்க மூடர்களே

பதில் தாருங்கள்...!

ஜீன்ஸ், டீசர்ட்
அவிழ்த்துவிட்டு
பின்னந்தலையில்
ஒரு அடிகுடுமி வைத்து,
அய்யனார் மீசை முறுக்கி
எட்டுமுழும்வேட்டியை மடித்து
கால் தொடையை தட்டி
கலாச்சார கொம்பை தூக்கி
அந்த கால
ஆம்பிளைகளைப்போல.......
வாருங்கள்
வந்து பதில் சொல்லுங்கள்
உங்களுக்கு இல்லாத
கற்பு மண்ணாங்கட்டி
எனக்கு ஏன்
உள்ளதென்று...!




-----------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (14-Sep-14, 7:17 pm)
பார்வை : 874

மேலே