மறந்திட முடியுமா உன்னால்

மறந்திட முடியுமா உன்னால்
மறந்திடு பெண்ணே தன்னால்
மறந்தால் காதலா
அதன் மறுபெயர் என்னவோ ??

ஒன்றாய் கைகோர்த்து
கடல் அலையில் நடைபோட்டு
என் தொழில் சாய்ந்து கொண்டு
நீ கதைகள் பேசியது
மறந்திட முடியுமா உன்னால்
மறந்திடு பெண்ணே தன்னால்

உனக்காய் காத்திருந்து - நீ
வர தாமதித்து - என்
உள்ளம் பதறவைத்து
நான் முதன் முறை கோபம் கொண்டு
என் முதல் அழுகை நீ துடைக்க
மறந்திட முடியுமா உன்னால்
மறந்திடு பெண்ணே தன்னால்

என் கவிதைக்கு
முதல் பரிசு கிடைத்ததற்கு
அந்த செய்தி சொல்வதற்கு உன்னிடம்
ஓடியே பல மையில் வந்தது
மறந்திட முடியுமா உன்னால்
மறந்திடு பெண்ணே தன்னால்

எழுதியவர் : ருத்ரன் (14-Sep-14, 7:48 pm)
பார்வை : 136

மேலே