சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

புராணம் என்பது என்ன?
வேத ஆகமப் பொருளை சரித்திர வடிவில் விவரிப்பது.

புராணத்தில் விவரிக்கப்படுபவை எவை? விளக்கங்கள்
உலக் தோற்றம், உயிர் இறைவனை அடைதல், பாரம்பரியங்கள், அவற்றோடு தொர்டபுடைய கதைகள், மனுவந்தரங்கள் ஆகியவற்றை கூறும். இது சைவம் முதல் ஆக்கினேயம் வரை உள்ள பதினெட்டு ஆகும்.


சிவபுராணம்
சைவம் ,காந்தம், லிங்கம், கூர்மம், வாமனம், வராகம், பௌடிகம், மச்சியம், மார்க்கண்டேயம், பிரமாண்டம் – 10
விஷ்ணுபுராணம் - நாரதீயம்,பாகவதம்,காரூடம்,வைணவம் – 4
பிரமபுராணம் - பிரமம், பதுமம் – 2
சூரியபுராணம்,பிரமகைவர்த்தம் – 1
அக்னிபுராணம் - ஆக்கிநேயம் - 1
உபபுராணங்கள்
உசனம்,கபிலம்,காளி,சனற்குமாரம்,சாம்பவம்,சிவதன்மம்,சௌரம், தூருவாசம்,நந்தி,நாரசிங்கம்,நாரதீயம்,பராசரம்,பார்க்கவம், ஆங்கிரம்,மாரீசம்,மானவம்,வாசிட்டலைங்கம், வாருணம் - 18



சாத்திரங்கள் எதனை உணர்த்தும்?
சிஷை - வேதங்களை ஓதும் முறை
கற்பம் - வேதங்களில் விதித்த கர்மங்களை அனுட்டிக்கும் முறை
சோதிடம் - வேதங்களை ஒதுவதற்கான காலம்
வியாகரணம் - வேதங்களின் எழுத்து, சொல், பொருள் இலக்கணம்
நிருத்தம் - சொற்களின் வியாக்யாணம்
சந்தம் - வேத மந்திரங்களின் சந்தங்களின் இலக்கணம்

இவை தவிர வேறு சாத்திரங்கள் இருக்கின்றனவா?
சாங்கியம், பாதஞ்சலம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சை மற்றும் வேதாந்தம் என ஆறு தத்துவ சாத்திரங்கள் உள்ளன.

எழுதியவர் : அரிஷ்டநேமி (15-Sep-14, 6:32 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 459

மேலே