ஆசாரம் வீடுபெற் றார் - ஆசாரக் கோவை 100

அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
அரசன் தொழில்தலை வைத்தான் மணாளனென்
றொன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
ஆசாரம் வீடுபெற் றார். 100 ஆசாரக் கோவை

- பஃறொடை வெண்பா

பொருளுரை:

அறியாத நாட்டவன், வறியவன், வயதில் முதிர்ந்தவன், வயதில் இளையவன்,
உயிர் இழந்தவன், அஞ்சினவன், உண்பவன், அரசரது கட்டளையில் குறுக்கிட்டவன்,
மணமகன் என்ற இந்த ஒன்பது பேரைப் பற்றியும் சொல்லுமிடத்து அவர்கள் மிகுதியும்
ஒழுக்கத்தினின்றும் விலக்கு உடையவராவர்.

வீடு - விடுதல், ஆசாரம் - ஒழுக்கம்.

மணவாளன் : மணாளன் என மருவியது.

‘உரைக்குங்கால் ஆற்றவும்' ‘உலகத்தில் ஆற்றவும்' என்றும் பாடம்.

(முற்றும்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-14, 5:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 324

சிறந்த கட்டுரைகள்

மேலே