காலதேவன்
ஓ
காலதேவனே
கட்டழகிகளை கண்டாலும் – நீ
காலந்தாழ்த்தாது கடிசாகச் செல்வதென்ன?
குற்றங் கொள்ளாமல் யாரும் உன்னை
குறை கூறாமல் இருப்பதன் மர்மம் என்ன?
என்றெனக் குறைப்பாயோ?
குற்றவாளிக் கூண்டில் கூனிக்குறுகி நில்லாமல்
கூத்தாடி போல் வந்து காற்றாடி போல் செல்லும்
உன்னையே எண்ணி எண்ணி
என்னையே மறந்து நிற்கின்றேன்.