உன் மனதின் கோளாறு

சீ ..
பக் ....
சப்ப ....
ய்யே....
சுமார் ... என்றெல்லாம்
யார் யாரையோ வெறுத்தாலும்
வார்த்தையால் உதறினாலும்
உன் உடன் பிறந்ததயோ ..
உன் உள்ளம் வென்றவளையோ..
உன் உயிரில் கலந்தவளையோ..
உனக்கு மேன்மை கொண்டவளையோ..
உன் கண்கள் மட்டும் ;
பார்க்கப் பார்க்க அழகு என்கிறாயே ...
கோளாறு உன் கண்களில் இல்லை
உன் மனதில் என்பது புரிகிறதா ???
-------------------------------------------------------------------
ரிப்னாஸ் - திக்குவல்லை - தென்னிலங்கை