பென்சில் சொன்ன காதல் - இராஜ்குமார்

பென்சில் சொன்ன காதல்
==========================

அன்பெனும் பென்சிலை கொண்டே
அழியாமல் வரைந்து பார்த்தேன்
வாழ்க்கையெனும் வட்டத்தை

எனது தாயே மையமானாள்
முழுதாய் நீயே ஆரமானாய்

விட்டம் முழுக்க உன் சட்டம்
வரைய நினைப்பது நான் மட்டும்
விரைந்து வரையுது என் விரல்கள்
வாழ துடிக்குது உன்நக கணுக்கள்

மையம் என்றும் நிலையாகும்
ஆரம் மட்டும் பெரிதாகும்

தோல்வி இங்கே வரும்போகும்
சரிந்து விட்டால் பிழையாகும்

ரசனை முழுக்க சிறப்பாகும்
மறுத்து விட்டால் வெறுப்பாகும்

காதல் எனது கருவாகும்
வாழ்க்கை அழகாய் உருவாகும்

- இராஜ்குமார்

நாள் : 4 - 6 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (16-Sep-14, 9:19 pm)
பார்வை : 121

மேலே