அவன் நினைவால்

அவன் நினைவால்

நெடுந்தூரமும் நொடி பயணம் ஆனது
என் இரவும்கூட இம்சை ஆனது
என் கனவும்கூட களைந்து போனது
உணவும் எனக்கு மறந்து போனது
என் சுவாசம் எனக்கு எதிரியானது
அவன் வாசம் கொண்டே என் உயிர் ஜெனிக்குது
நடைமுறை வாழ்கையும் நாடகமானது
என் நம்பிக்கையே எனக்கு நரகமானது
காற்றும்கூட கண்ணீர் சிந்துது
என் காதலை தினமும் திட்டி தீர்க்குது
இன்று நிழலே எனக்கு நிஜமானது
அவன் நினைவால் மட்டுமே என் உயிர் வாழுது...............

எழுதியவர் : ANJALI (16-Sep-14, 9:32 pm)
Tanglish : avan ninaival
பார்வை : 116

மேலே