அம்மா என்னும் உறவு

தவமாய் எனக்கு, வாய்த்திட்ட உறவு
தந்தை யாரென்று, சுட்டி காட்டிய உறவு
தொப்புள் கொடியோடு, பிணைக்கப்பட்ட உறவு
தான் உண்ட உணவை எனக்கும், தந்திட்ட உறவு
நான் உதைத்த உதையை, தாங்கிக் கொண்ட உறவு
நலமாக, என்னை காத்திட்ட உறவு
பத்து மாதம் பாடுபட்டு, சுமந்திட்ட உறவு
என்னை பிரசவிக்க, மறுபிறவி எடுத்திட்ட உறவு
பாலூட்டி எனக்கு, பசியாற்றிய உறவு
பாசத்தை பொழிந்து, வளர்த்திட்ட உறவு
தன் மடியில் கிடத்தி, தட்டிக் கொடுத்த உறவு
தாலாட்டி, என்னை தூங்க வைத்த உறவு
முத்தமிட்டு, என்னை அணைத்து கொண்ட உறவு
என் முகம் பார்த்து, பார்த்து, பூரித்த உறவு
அம்மா என்றழைக்கையில், ஆனந்தப்படும் உறவு
அன்போடு என்னை, ஆதரிக்கும் உறவு
என்றும் அவள் பார்வையில், நான் குழந்தையாகிறேன்
எண்ணிப் பார்க்கையில், என்னை மறக்கிறேன்
கண்ணீர் மல்க, கலங்கி நிற்கிறேன்
எனக்கொரு வரமளிக்க, இறைவா நீ விரும்பினால்,
எப்பிறப்பும் இவளை, எனக்கு தாயாக்கு.

எழுதியவர் : சீ. பஞ்சாபகேசன் (17-Sep-14, 10:02 pm)
Tanglish : en thaay
பார்வை : 351

மேலே